/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விதை பந்துகள் உருவாக்கிய அரசு பள்ளி மாணவர்கள்
/
விதை பந்துகள் உருவாக்கிய அரசு பள்ளி மாணவர்கள்
ADDED : ஏப் 26, 2025 01:53 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே டி.டி., தின்னுார் அரசு உயர்நிலைப்பள்ளி, நல்ராலப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அலேசீபம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய, மூன்று அரசு பள்ளிகளில் படிக்கும், 170 மாணவ, மாணவியருக்கு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, ஆரோக்கியம் ஆகியவற்றை முன்னெடுக்கும் முயற்சியாக, டாடா எலக்ட்ரானிக்ஸ்
நிறுவனம் சார்பில், ஒரு வாரம் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில், மாணவ, மாணவியருக்கு விதை பந்துகள் தயார் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மூலமாக இலுப்பை, அரசம், நாவல், இலந்தை போன்ற நாட்டின மரங்களுக்கான விதைகளை கொண்டு, 4,700க்கும் மேற்பட்ட விதை பந்துகள் உருவாக்கப்பட்டன.
இவற்றை, அருகில் உள்ள வனப்பகுதியில் வீசி பசுமையை காக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவ, மாணவியர் தங்களது வாழ்வில் தினமும் பின்பற்ற வேண்டிய சுகாதார முறைகள் குறித்து, டாடா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
துாய்மையாக கைகளை கழுவுவது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மாணவ, மாணவியர் தங்களது வீடுகளில் கை கழுவ உதவும் வகையில், ஹேண்ட்வாஷ் பாட்டில்கள் வழங்கப்பட்டன.