/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேசிய மல்யுத்த போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தகுதி
/
தேசிய மல்யுத்த போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தகுதி
தேசிய மல்யுத்த போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தகுதி
தேசிய மல்யுத்த போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தகுதி
ADDED : அக் 25, 2025 01:07 AM
மேட்டூர், இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில், தேசிய அளவில் மல்யுத்த போட்டிக்கான தேர்வு, ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் கடந்த வாரம் நடந்தது. அதில் மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் தயாளன், கி ேஷார், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும், கிர்த்திக், பிரேம் ஆனந்த், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் முதலிடம் பிடித்தனர்.
இதன்மூலம், 4 பேரும், டிசம்பரில் நடக்க உள்ள தேசிய மல்யுத்த போட்டிக்கு தமிழக அணி சார்பில் விளையாட தேர்வு பெற்றுள்ளனர். இதனால் மாணவர்கள், பயிற்சி அளித்த லோகநாதன், பள்ளி உடல்கல்வி துறையின் திருமஞ்சனம், சாமுவேல் வில்லிங்டனை, தலைமை ஆசிரியர் ஜெயகுமார் உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர், ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.