/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவருக்கு உதவித்தொகை 31 வரை விண்ணப்பிக்கலாம்
/
மாணவருக்கு உதவித்தொகை 31 வரை விண்ணப்பிக்கலாம்
ADDED : அக் 25, 2025 01:07 AM
சேலம், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:பி.எம்.யாசஸ்வி எனும், 'டாப் கிளாஸ்' பள்ளிகளில் படிக்கும், பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர் பிரிவுகளை சார்ந்த மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க, வரும், 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். உதவித்தொகைக்கு தகுதியான பள்ளிகளின் பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். புதிதாக விண்ணப்பிக்க, பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் படிக்கும், 9, பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள், அலைபேசி எண், ஆதார் தகவல்களை, தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தை அணுகலாம்.

