/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மரணத்தை அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்'
/
'டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மரணத்தை அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்'
'டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மரணத்தை அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்'
'டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மரணத்தை அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்'
ADDED : அக் 20, 2024 04:14 AM
மேட்டூர்: ''மழை விட்ட பின்பும் பல இடங்களில் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதை தற்போதைய அரசு முழுமையாக அகற்ற-வில்லை. இதனால் குழந்தைகள், டெங்கு காய்ச்சலால் பாதிக்கின்-றனர். தற்போது டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மரணத்தை அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்,'' என, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சேலம் மாவட்டம் மேச்சேரி மேற்கு ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில் செயல் வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம், மேச்சேரியில் நேற்று நடந்தது. ஒன்றிய அவைத்லைவர் சாமியண்ணன் வர-வேற்றார். தலைமை வகித்து முன்னாள் அமைச்சர் விஜய-பாஸ்கர் பேசியதாவது: அ.தி.மு.க., என்ற கப்பலை ஓட்டிச்-செல்லும் சிறந்த மாலுமியாக பொதுச்செயலர், இ.பி.எஸ்., உள்ளார். 2026ல், அ.தி.மு.க., மீண்டும் வெற்றி பெறும். தி.மு.க., ஆட்சி நீடிக்க இன்னும், 10 அமாவாசைகள் மட்டுமே உள்ளன. மேட்டூர் சட்டசபை தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்க கூடாது என பெரும்பாலான நிர்வாகிகள் கூறினர். அப்படி ஒதுக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியது, சொத்து வரியை உயர்த்தியது மட்டுமே, தி.மு.க.,வின் சாதனை. இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், ராஜ்ய-சபா எம்.பி., சந்திரசேகரன், மாநில ஜெ., பேரவை துணை செயலர் கலையரசன், மாவட்ட மகளிர் அணி செயலர் லலிதா, மேச்சேரி பேரூர் செயலர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
'டெங்கு காய்ச்சல் பாதிப்பு'
தொடர்ந்து விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: மழை விட்ட பின்பும் பல இடங்களில் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதை தற்-போதைய அரசு முழுமையாக அகற்றவில்லை. இதனால் குழந்-தைகள், டெங்கு காய்ச்சலால் பாதிக்கின்றனர். தற்போது டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மரணத்தை அரசு வெளிப்படை-யாக தெரிவிக்க வேண்டும். தேவையான இடங்களில் வார்டுகள் அமைக்க வேண்டும்.
களப்பணிக்கு மருத்துவ குழு நேரில் செல்ல வேண்டும். அப்படி எந்த குழுவும் செல்லவில்லை. முகாம் நடத்த தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளதாக, இ.பி.எஸ்., ஆதாரத்துடன் கூறியுள்ளார். சில பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை உள்ளூர்களில் கொள்முதல் செய்கின்றனர். இந்த அரசு தேவையான மருந்து, மாத்திரைகளை தடையின்றி கொள்-முதல் செய்து மாவட்ட, ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.