/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பால் விலை குறைப்பால் ரூ.1,700 கோடி இழப்பு ஆவினுக்கு உடனே வழங்க அரசுக்கு வலியுறுத்தல்
/
பால் விலை குறைப்பால் ரூ.1,700 கோடி இழப்பு ஆவினுக்கு உடனே வழங்க அரசுக்கு வலியுறுத்தல்
பால் விலை குறைப்பால் ரூ.1,700 கோடி இழப்பு ஆவினுக்கு உடனே வழங்க அரசுக்கு வலியுறுத்தல்
பால் விலை குறைப்பால் ரூ.1,700 கோடி இழப்பு ஆவினுக்கு உடனே வழங்க அரசுக்கு வலியுறுத்தல்
ADDED : அக் 29, 2025 01:54 AM
சேலம், ''தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், விற்பனை விலையில் லிட்டருக்கு, 3 ரூபாய் குறைத்ததால், ஆவினுக்கு தினமும், 1 கோடி ரூபாய் வீதம் இழப்பு ஏற்படுகிறது. தற்போது வரை ஏற்பட்டுள்ள, 1,700 கோடி ரூபாய் இழப்பை, அரசு உடனே விடுவிக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க மாநில செயற்குழு கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. இதுகுறித்து அச்சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் அளித்த பேட்டி:
தமிழகத்தில், 2023 நவ., 18 முதல், பால் லிட்டருக்கு, 3 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அத்துடன் கொள்முதல் விலையாக, லிட்டர் பசும்பாலுக்கு, 38 ரூபாய், எருமைப்பாலுக்கு, 50 ரூபாய் வரை கிடைக்கிறது. இந்த விலை பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படி ஆகவில்லை. லிட்டருக்கு பசும்பால், 45 ரூபாய், எருமைப்பாலுக்கு, 60 ரூபாய் வழங்க வேண்டும். தவிர ஊக்கத்தொகையாக லிட்டருக்கு, 7 ரூபாய் வழங்க வேண்டும். ஊக்கத்தொகையை, தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், விற்பனை விலையில் லிட்டருக்கு, 3 ரூபாய் குறைத்ததால், ஆவினுக்கு தினமும், 1 கோடி ரூபாய் வீதம் இழப்பு ஏற்படுகிறது. அதை அரசு ஈடுசெய்யும் என, ஆவின் நம்பியுள்ளது. அதனால் தற்போது வரை ஏற்பட்டுள்ள, 1,700 கோடி ரூபாய் இழப்பை, அரசு உடனே விடுவிக்க வேண்டும்.
தமிழகம் முழுதும் இருந்து தினமும், 20 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு அனுப்பப்படுகிறது. அதன் தரம் குறைவாக உள்ளதாக கூறி, ஒரு பாயின்டுக்கு, 28 காசு வீதம், லிட்டருக்கு, 4 பாயின்ட் வீதம், 1 ரூபாய், 12 காசு பிடித்தம் செய்யப்படுகிறது. அதன்படி, 20 லட்சம் லிட்டருக்கு தினமும், 22.40 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்வதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதை தடுக்க, கொள்முதல் நடக்கும் சங்கத்திலேயே, உற்பத்தியாளருக்கு பால் தரம் குறித்த ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும்.
கொள்முதல், விற்பனை பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள், ஆவினிடம் ஊதியம் பெற்றுக்கொண்டு, தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக வேலை பார்க்கின்றனர். இதனால் தேசிய பால் வள வாரியத்திடம் குறைந்தது, 3 ஆண்டுக்கு, ஆவின் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

