/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'ஒரே நிலைப்பாட்டில் கவர்னரும் தமிழக அரசும் இருப்பது அவசியம்'
/
'ஒரே நிலைப்பாட்டில் கவர்னரும் தமிழக அரசும் இருப்பது அவசியம்'
'ஒரே நிலைப்பாட்டில் கவர்னரும் தமிழக அரசும் இருப்பது அவசியம்'
'ஒரே நிலைப்பாட்டில் கவர்னரும் தமிழக அரசும் இருப்பது அவசியம்'
ADDED : செப் 25, 2024 07:15 AM
சேலம்: அகில பாரதிய வித்யாத்ரி பரிஷத் அமைப்பின் மாநில செயலர் யுவராஜ், இணை செயலர் எழில்வேந்தன், சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
சேலத்தில் வரும், 28, 29ல், ஏ.பி.வி.பி., அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நடக்க உள்ளது. அதில் மாணவர்களை பாதிக்கும் கல்வி சார்ந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும். ஏ.பி.வி.பி.,யின் அகில பாரத இணை அமைப்பு செயலர் பாலகிருஷ்ணா பங்கேற்க உள்ளார். தமிழகத்தில் பல பல்கலைகளில் பருவத்தேர்வுகள் நடத்தப்படாமல், பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளன. உயர்கல்வித்துறை அமைச்சர், கவர்னருடன் உள்ள முரண்பாட்டால் பல்வேறு கருத்துகளை கூறி வருகிறார். கவர்னரும் தமிழக அரசும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தால்தான் மாணவர் நலன் பாதுகாக்கப்படும்.
தேசிய கல்வி கொள்கையில் எந்த மொழி திணிப்பும் இல்லை. உச்சநீதிமன்றம், 'நீட்' குறித்து எந்த சட்ட சிக்கலும் இல்லை என தெரிவித்துள்ளது. அத்தேர்வு மாணவர்களுக்கு கட்டாயம் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.