/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன்; நெசவாளர்களுக்கு கவர்னர் ரவி நம்பிக்கை
/
உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன்; நெசவாளர்களுக்கு கவர்னர் ரவி நம்பிக்கை
உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன்; நெசவாளர்களுக்கு கவர்னர் ரவி நம்பிக்கை
உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன்; நெசவாளர்களுக்கு கவர்னர் ரவி நம்பிக்கை
ADDED : அக் 16, 2024 06:05 AM

மேட்டூர் : அனைத்து இந்திய நெசவாளர் நலச்சங்கம் சார்பில் சிறந்த நெசவாளர்களை கவுரவிக்கும் விழா, சேலம் மாவட்டம் மேச்சேரியில் நேற்று நடந்தது.
ஹம்பி ேஹமகூட மகாசமஸ்தான ஸ்ரீ காயத்ரி பீட பீடாதிபதி தேவாங்க குல ஜெகத்குரு மஹாராஜ் ஸ்ரீஸ்ரீ தயானந்தபுரி ஸ்வாமிஜி தலைமை வகித்தார். விழாவில் சிறந்த நெசவாளர்களுக்கு பட்டயம் வழங்கி, தமிழக கவர்னர் ரவி பேசியதாவது:
இந்த விழாவுக்கு வந்தபோது நீங்கள் தந்த வரவேற்பை கண்டு மனம் உருகிவிட்டது. மனிதர்களுக்கு ஆடை நெய்து தரும் உங்களை, தாமதமாக சந்தித்ததாக நினைக்கிறேன். மேச்சேரிக்கு நான் வந்தது, சிறு வயதில் எனது கிராமத்தில் இருந்ததை நினைவுபடுத்துகிறது. ஆடைகள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதால் இந்தியாவின் வளமும் அதிகரிக்கிறது.ரோமானியர்கள், 2,000 ஆண்டுகளுக்கு முன் ஆடைகளின் முக்கியத்துவதை தெரிந்து வைத்துள்ளனர். அவர்கள், 55 கோடி தங்க காசுகளை வழங்கி ஆடைகளை வாங்கியுள்ளனர். இதன்மூலம் ஆடைகளின் முக்கியத்துவத்தை உணரலாம். உங்கள் தொழில், அதில் நீங்கள் காட்டும் ஆர்வத்தை தெரிந்து கொண்டேன். உங்கள் கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன். இங்கே பட்டயம் பெற்ற எளிய மனிதர்களை நான் தொடும்போது தெய்வீக அனுபவம் கிடைத்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
சங்க தலைவர் பிரபாகரன், பொதுச்செயலர் அண்ணாதுரை, மாநிலம் முழுதும் இருந்து நெசவாளர் நலச்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக கவர்னர் ரவி, அருகிலுள்ள நெசவு கூடத்துக்கு சென்று நெசவாளர்களிடம் குறை கேட்டறிந்தார். பின் கூட்டம் நடந்த மண்டபத்துக்கு அருகே, கண்காட்சியை பார்வையிட்டார். தொடர்ந்து மேச்சேரி பத்ரகாளியம்மன், சாம்ராஜ்பேட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் வழிபட்டார்.