நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, திப்பம்பட்டி ஊராட்சியில், 43 சென்ட் அரசு தரிசு நிலத்தை, தனிநபர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார்.
இதனால் மக்கள் புகார்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று, சேலம் தாசில்தார் தாமோதரன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றினர். பொக்லைன் மூலம், அங்கிருந்த கொட்டகை அகற்றப்பட்டு, அளவீடு செய்து முட்டுக்கல் நடப்பட்டது.

