/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'காலைக்கதிர்' செய்திகளுடன் அரசு பள்ளி காலண்டர்
/
'காலைக்கதிர்' செய்திகளுடன் அரசு பள்ளி காலண்டர்
ADDED : ஜன 16, 2025 07:25 AM
பனமரத்துப்பட்டி: 'காலைக்கதிர்' நாளிதழில் வெளியான செய்திகளுடன், அரசு தொடக்கப்பள்ளி சார்பில், காலண்டர் வெளியிட்டு பெற்றோருக்கு வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளியில், 101 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு பொங்கல் விழா கடந்த, 10ல் கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி சார்பில், 2025ம் ஆண்டு காலண்டர் வெளியிடப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவர்கள், அவர்களது பெற்றோர், அந்த கிராம மக்களுக்கு வழங்கப்பட்டன. காலண்டர் அட்டையில், பள்ளியின் சிறப்புகள் குறித்து, 'காலைக்கதிர்' நாளிதழில் வெளியான, பல்வேறு செய்திகள் இடம்பெற்றிருந்தன.
இதுகுறித்து அப்பள்ளி ஆசிரியர் தெய்வநாயகம் கூறியதாவது: ஒரு குக்கிராமத்தில் உள்ள, அரசு தொடக்கப்பள்ளியின் சிறப்புகள், நிகழ்வுகள், மாணவ, மாணவியரின் திறமைகளை, 'காலைக்கதிர்' நாளிதழ் பதிவு செய்து வருகிறது. இதன்மூலம் எங்கள் பள்ளியின் பெருமையை, அனைத்து தரப்பு மக்களும் தெரிந்துகொள்ள உதவி செய்து வருகிறது. அதில் சில செய்திகளை, காலண்டரில் வைத்துள்ளோம். பள்ளியில் படிப்பறிவு, பட்டறிவு இரண்டும் சேர்த்து கற்றுத்தரப்படுகிறது. மக்கள் விரும்பும் பள்ளியாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

