/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வங்கி ஏ.டி.எம்., மையத்தில் பேட்டரி திருடிய பட்டதாரி கைது
/
வங்கி ஏ.டி.எம்., மையத்தில் பேட்டரி திருடிய பட்டதாரி கைது
வங்கி ஏ.டி.எம்., மையத்தில் பேட்டரி திருடிய பட்டதாரி கைது
வங்கி ஏ.டி.எம்., மையத்தில் பேட்டரி திருடிய பட்டதாரி கைது
ADDED : ஜன 20, 2025 07:15 AM
ஆத்துார்: வங்கி ஏ.டி.எம்., மையங்களில், பேட்டரி திருடிய, பட்டதாரியை போலீசார் கைது செய்தனர்.
ஆத்துார், ஒட்டம்பாறையில் உள்ள ஓட்டல் வளாகத்தில், தனியார் வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது. அங்கு கடந்த, 11 மதியம், 1:00 மணிக்கு, 4 பேட்டரி திருடுபோனதாக, வங்கி மேலாளர் புகழேந்தி புகார் அளித்தார். ஆத்துார் டவுன் போலீசார் வழக்குப்பதிந்தனர். டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில், இரு தனிப்படையினர் விசாரித்தனர். அதில் பழனியாபுரியை சேர்ந்த, பட்டதாரி சதீஷ்குமார், 36, திருடியது தெரிந்தது. நேற்று, அவரை, போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:சதீஷ்குமார், 2018ல், சேலத்தில் உள்ள தனியார் நிறுவன வங்கி ஏ.டி.எம்., மையத்தில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டார். அப்போது, ஏ.டி.எம்., மையத்துக்கு கொண்டு சென்ற, 15 லட்சம் ரூபாயை கையாடல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அத்துடன், 2019ல், ராசிபுரத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்., மையத்தில், 16 பேட்டரி திருடியது; அதே ஆண்டில், இரு வங்கி ஏ.டி.எம்.,களில், 3 பேட்டரி திருடியது; 2022ல், ஆத்துார் தனியார் விதைப்பண்ணையில், இரு மொபைல் போன் திருடியது; 2023ல் கெங்கவல்லியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், இரு பேட்டரியை திருடிய வழக்குகளில் கைது செய்யப்பட்டவர். தற்போது மீண்டும், ஏ.டி.எம்., பேட்டரி திருடி கைதாகியுள்ளார். ஒரு பேட்டரியின் மதிப்பு, 15,000 முதல், 20,000 ரூபாய் வரை இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.