/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக் எரிந்து நாசம் தப்பிய பட்டதாரி
/
பைக் எரிந்து நாசம் தப்பிய பட்டதாரி
ADDED : ஜூலை 05, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், புதுச்சேரி, உப்பளத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத், 32. பட்டதாரியான இவர், கோவை, மேட்டுப்பாளையத்தில், ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து, 'பல்சர்' பைக்கில் புதுச்சேரிக்கு புறப்பட்டார்.
சேலம், சீரகாபாடி அருகே சென்றபோது, பைக்கில் கரும்புகை வந்தது. உடனே பைக்கை, சாலையோரம் நிறுத்தி பார்த்தபோது, சிறிது நேரத்தில் தீப்பற்றி எரியத்தொடங்கியது. பின் மளமளவென பரவி பைக் முழுதும் எரிந்து நாசமானது. ஸ்ரீநாத் தப்பினார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.