/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெல்டிங்' தொழிலாளியை கரம்பிடித்த பட்டதாரி பெண்
/
வெல்டிங்' தொழிலாளியை கரம்பிடித்த பட்டதாரி பெண்
ADDED : ஜூலை 12, 2025 12:50 AM
ஆத்துார், வாழப்பாடி, அனுப்பூரை சேர்ந்த அங்கமுத்து மகன் நவீன், 22. பிளஸ் 2 படித்த இவர், வாழப்பாடியில் உள்ள வெல்டிங் பட்டறையில் பணிபுரிகிறார். காரிப்பட்டி, எஸ்.என்.மங்கலத்தை சேர்ந்த, முருகேசன் மகள் சந்தியா, 20. பி.காம்., முடித்துள்ளார். இரு ஆண்டுக்கு முன், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர்.
இதை அறிந்து, இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்க, கடந்த, 9ல், வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நேற்று பாதுகாப்பு கேட்டு, ஆத்துார் டவுன் போலீசில் தஞ்சமடைந்தனர். இருவீட்டு பெற்றோரை அழைத்து போலீசார் பேச்சு நடத்தினர். சந்தியாவின் பெற்றோர் ஏற்கவில்லை. இதனால் நவீனுடன், சந்தியாவை அனுப்பி வைத்தனர்.