ADDED : பிப் 03, 2025 07:17 AM
தாரமங்கலம்: தாரமங்கலம், துட்டம்பட்டி, கோனேரி வளவை சேர்ந்தவர் கார்த்திக், 26. பி.எஸ்சி., படித்த இவர், ஓமலுாரில் மருந்து கடையில் பணிபுரிகிறார். அதேபோல் கொங்கணாபுரம், கோணங்கியூரை சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 21. பி.காம்., முடித்து விட்டு சேலத்தில் உள்ள தனியார், 'ஸ்கேன்' சென்டரில் பணிபுரிகிறார். இவர்களது பெற்றோர், பெங்களூரில் கல் உடைக்கும் தொழில் செய்தனர். அப்போது கார்த்திக், பிரியதர்ஷினி இடையே பழக்கம் ஏற்பட்டு, 5 ஆண்டுகளாக காதலித்தனர்.
இதற்கு பிரியதர்ஷினி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறினர். நேற்று மல்லிக்குட்டை பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு, தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர். இருவரது பெற்றோரை அழைத்து போலீசார் பேசியதில், பிரியதர்ஷினி பெற்றோர் ஏற்கவில்லை. இதனால் கார்த்திக்குடன் பெண்ணை அனுப்பினர்.

