நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,உள்ளாட்சி தினத்தையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் நவ., 1ல் கிராம சபா கூட்டம் நடக்க உள்ளது.
அதில் ஊராட்சி, பொதுநிதி செலவினம், ஊராட்சி தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் தடுத்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு உள்ளிட்ட அரசின் முக்கிய திட்டங்கள் குறித்தும் மக்கள் மத்தியில் விவாதம் நடக்க உள்ளது. மக்கள் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக் கொண்டுள்ளார்.

