/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'தி.மு.க., ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்'
/
'தி.மு.க., ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்'
'தி.மு.க., ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்'
'தி.மு.க., ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்'
ADDED : அக் 29, 2025 01:16 AM
மேட்டூர், ''தி.மு.க., ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில், நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.
மேட்டூர், சதுரங்காடியில், பா.ம.க., பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அக்கட்சி தலைவர் அன்புமணி பேசியதாவது:
சமீபத்தில் ஒரு பத்திரிகை, இந்தியாவில் சிறந்த, 10 முதல்வர் யார் என கணக்கெடுப்பு நடத்தியது. அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பெயர் இல்லை. அதற்கு அவரது ஆட்சியே உதாரணம்.
அமெரிக்காவில் கிடைக்கும் போதைப்பொருட்கள் அனைத்தும், தமிழக குக்கிராமங்களில் எளிதாக கிடைக்கிறது. இதனால் இளைஞர்கள், 'போதை'க்கு அடிமையாகிறார்கள்.
இதற்கு தமிழகத்தில், 1.30 கோடி இளைஞர்கள் படித்துவிட்டு வேலையின்றி இருப்பதே காரணம். நாட்டில், போதை பொருட்கள் அதிகம் புழக்கத்தில் உள்ள மாநிலம் தமிழகம் என்பதால், 'கஞ்சா நாடு' என அழைக்கலாம். போதைக்கு அடிமையான இளைஞர்களின் எண்ணிக்கை, 9ல் இருந்து, தற்போது, 13 சதவீதமாக அதிகரித்துள்ளது. தி.மு.க., ஆட்சி தொடர்ந்தால், இந்த சதவீதம் மேலும் உயரும்.பட்டியல் இனத்தில், 3 பிரிவுகள் உள்ளன. அதில், 78 உட்பிரிவுகள். அதில், 8 பிரிவுகளுக்கு தான் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதர பிரிவுகளுக்கு வேலை கிடைப்பதில்லை. இதுகுறித்து திருமாவளவன் கவலைப்படுவதில்லை. வன்னிய சமூகத்துக்கு தனி இடஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, 1,310 நாட்களாகிறது. தற்போதைய முதல்வர் நினைத்தால், 30 நாட்களில் உள் ஒதுக்கீடு வழங்க முடியும். இதுவரை வழங்கவில்லை. அதனால் வரும் டிச., 17ல் என் தலைமையில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம்.
தென்மாநிலங்களில் படித்த இளைஞர்கள் அதிகம் உள்ளனர். அங்கு அவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் அளவுக்கு தொழிற்சாலைகள் இல்லை. இதனால் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி, ஜாதி ரீதியான மோதல்கள் நடக்கின்றன. வேலைவாய்ப்பு இல்லாததே, மோதலுக்கு காரணம். அதனால் வரும் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என நீங்கள் முடிவு செய்வதை விட, யார் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என முடிவு செய்யுங்கள். தி.மு.க., ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில், நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
'ஒன்று சேர வேண்டும்'
இடைப்பாடியில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு, சேலம் தெற்கு மாவட்ட செயலர் செல்வகுமார் தலைமை வகித்தார். அதில் அன்புமணி பேசியதாவது:
மலை, மண்ணை திருடியவர்கள், தற்போது கிட்னியையும் திருட ஆரம்பித்துள்ளார்கள். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பெண்களை, பெண் குழந்தைகளை யாராலும் காப்பாற்ற முடியாது. அதனால், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருக்க, நாம் எல்லாம் ஒன்று சேர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொதுச்செயலர் வடிவேல் ராவணனன், மாநில துணை தலைவர் அண்ணாதுரை, வன்னியர் சங்க மாநில துணை தலைவர் கார்த்தி, மாநில இளைஞரணி துணை செயலர் ரவி, தெற்கு மாவட்ட தலைவர் முத்துசாமி, நகர செயலர் சண்முகம் பங்கேற்றனர்.
இன்று ஓமலுார்
பா.ம.க., தலைவர் அன்புமணி, 'உரிமை மீட்க தலைமுறை காக்க' நடைபயண திட்டத்தில், இன்று ஓமலுார் சட்டசபை தொகுதியை பார்வையிடுகிறார். இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், ஓமலுாரில் முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்தி தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் மாணிக்கம், பொதுக்குழு உறுப்பினர் பாபு, மாவட்ட முன்னாள் கவுன்சிலர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து கார்த்தி கூறுகையில், ''அக்., 29(இன்று) காலை, 11:00 மணிக்கு, அன்புமணி, டேனிஷ்பேட்டை சரபங்கா ஆற்றை பார்வையிட்டு, அங்குள்ள விவசாயிகளை சந்தித்து பேசுகிறார். மாலை, 4:00 மணிக்கு ஓமலுார் பஸ் ஸ்டாண்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்,'' என்றார்.

