ADDED : ஜன 23, 2025 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: வரும், 26ல் குடியரசு தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில், அன்று கிராம சபை கூட்டம் நடக்க உள்-ளது. ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படும்.
மேலும் துாய்மையான குடிநீர் வினியோ-கத்தை உறுதி செய்வது, கட்டட அனுமதி வழங்குதல், ஜல் ஜீவன் இயக்கம், அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விபரங்கள், மக்களிடம் விவாதிக்கப்படும் என்பதால், அனைவரும் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

