/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குழந்தை மாயமான வழக்கில் புரோக்கருடன் தாத்தா கைது
/
குழந்தை மாயமான வழக்கில் புரோக்கருடன் தாத்தா கைது
ADDED : ஆக 11, 2025 02:32 AM
தேவூர்:குழந்தை காணாமல் போன வழக்கில், அவரது தாத்தா, நில புரோக்கரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி, தேவூர் அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி, குண்டங்காட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜா, 27. இவரது குழந்தை கவிஷா, 4, கடந்த, 30ல் அங்கன்வாடி மையத்துக்கு சென்றபோது மாயமானார்.
ராஜா புகாரின்படி, தேவூர் போலீசார் 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்தபோது, குழந்தையை, அவரது தாத்தா லோகிதாஸ் அழைத்துச் சென்றது தெரிந்தது. அவரிடம் விசாரித்தபோது, 'மகன் குடித்து விட்டு வந்து அடிக்கடி குழந்தையை அடிப்பார். குழந்தையை காப்பாற்றவே, சங்ககிரி, கள்ளுக்கடையை சேர்ந்த நில புரோக்கர் குமார், 42, என்பவரிடம் ஒப்படைத்தேன். நான் கடத்தவில்லை' என்றார்.
குமாரை பிடித்து போலீசார் விசாரித்தனர். பின், லோகிதாஸ், 62, குமார், 42, மீது கடத்தல் வழக்குப்பதிந்து, இருவரையும் தேவூர் போலீசார் கைது செய்தனர்.