/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விடுதியில் பெண் மர்ம சாவு கணவர் தலைமறைவு
/
விடுதியில் பெண் மர்ம சாவு கணவர் தலைமறைவு
ADDED : ஆக 11, 2025 02:32 AM
சேலம்,:தனியார் விடுதியில் பெண் மர்மமாக இறந்த சம்பவத்தில், தலைமறைவான கணவரை போலீசார் தேடுகின்றனர்.
திருப்பூர், காந்தி நகரை சேர்ந்த கட்டட கான்ட்ராக்டர் யுவராஜ். இவரது மனைவி உமா மகேஸ்வரி, 46. இவருக்கு உடல் நிலை பாதிப்பால், சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஒரு விடுதியில் தங்கி, இரண்டு மாதமாக தினமும் சிகிச்சை பெற்று வந்தார். உமா மகேஸ்வரி நேற்று முன்தினம் திடீரென மயங்கியதால், யுவராஜ் ஆம்புலன்ஸ் வரவழைத்தார். மருத்துவ உதவியாளர் பரிசோதனையில் இறந்துவிட்டது தெரிந்தது.
இந்நிலையில், விடுதி ஊழியர்களிடம், 'மனைவி உடலை கொண்டு செல்ல பணம் இல்லை. உறவினரிடம் வாங்கி வருகிறேன்' எனக்கூறி சென்றுள்ளார். ஆனால், திரும்பி வரவில்லை. விடுதி நிர்வாக புகாரின்படி டவுன் போலீசார் உடலை கைப்பற்றினர்.
யுவராஜின் மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டபோது 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
விடுதியில் அவர் கொடுத்திருந்த முகவரியும் போலி என, தெரிந்தது. இதனால் யுவராஜை போலீசார் தேடி வருகின்றனர்.