ADDED : ஆக 11, 2025 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம் மாவட்டம், மேட்டூர், கருமலைக்கூடலை சேர்ந்த, 19 வயது இளைஞர்; சூரமங்கலத்தில் உள்ள தனியார் கல்லுாரி, பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு மாணவர்.
ஆக., 8ல் கல்லுாரியில் இருந்து வெளியே வந்தவரை, இரு பைக்குகளில் வந்த மூன்று பேர், மாணவரை ஏற்றிக்கொண்டு, கஞ்சமலை அடிவாரம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று, நிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர். பெற்றோர் புகாரில், இரும்பாலை போலீசார், சேலம், மணியனுாரைச் சேர்ந்த ஷாஜகான், 23, உட்பட மூன்று பேரை பிடித்துவிசாரிக்கின்றனர்.

