/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேவூர் அருகே குழந்தை கடத்தல் வழக்கு தாத்தாவை தொடர்ந்து பாட்டியும் கைது

ADDED : ஆக 15, 2025 03:03 AM
சங்ககிரி, குழந்தை கடத்தல் வழக்கில், தாத்தாவை தொடர்ந்து, பாட்டியையும் போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி, தேவூர் அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி, குண்டங்காட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜா. இவரது, 4 வயது குழந்தை, கடந்த மாதம், 30ல் வினோபாஜி நகரில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு புறப்பட்ட நிலையில் மாயமானது.
ராஜா புகார்படி, தேவூர் போலீசார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து தனிப்படை அமைத்து தேடினர். கடந்த, 3ல், ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், குமாரபாளையத்தில் குழந்தையை விட்டுச்சென்ற நிலையில், போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணைக்கு பின், சங்ககிரி, கள்ளுக்கடையை சேர்ந்த, புரோக்கர் குமார், 42, குழந்தையின் தாத்தா லோகிதாசன், 62, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து விசாரித்ததில், குழந்தையின் பாட்டி சாந்தி, 60, உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதனால் அவரையும், நேற்று போலீசார் கைது செய்தனர்.