/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தில் பாட்டி பலி பேரன் படுகாயம்
/
விபத்தில் பாட்டி பலி பேரன் படுகாயம்
ADDED : ஜூலை 11, 2025 01:23 AM
வாழப்பாடி, வாழப்பாடி, சோமம்பட்டி, நடுத்தெருவை சேர்ந்தவர் விஸ்வபாரதி, 20. சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது பாட்டி, காரிப்பட்டியை சேர்ந்த ஜெயமணி, 65. இருவரும், நேற்று முன்தினம் மதியம், 12:30 மணிக்கு, சேலம், ஜான்சன்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு, 'ஸ்டார் சிட்டி' பைக்கில் புறப்பட்டனர். ஹெல்மெட் அணியாமல் விஸ்வபாரதி ஓட்டினார்.
மேட்டுப்பட்டி அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, நிலை தடுமாறி விழுந்ததில், இருவரும் படுகாயம் அடைந்தனர். மக்கள் மீட்டு, ஜெயமணியை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் உயிரிழந்தார். மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஸ்வபாரதி அனுமதிக்கப்பட்டுள்ளார். வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'ஜெயமணி பைக்கில் நகர்ந்து அமர்ந்துள்ளார். அப்போது விஸ்வபாரதி தடுமாற, சாலை தடுப்புச்சுவரில் பைக் மோதி விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரிந்தது' என்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.