/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சித்தா பிரிவுக்கு கூடுதல் கட்டடம் கட்ட பூமி பூஜை
/
சித்தா பிரிவுக்கு கூடுதல் கட்டடம் கட்ட பூமி பூஜை
ADDED : டிச 17, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், சித்த மருத்துவ பிரிவுக்கு, 7.70 லட்ச ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை, நேற்று நடந்தது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், தன் தொகுதி மேம்பாடு திட்டத்தில், இந்நிதியை ஒதுக்கி, பூமிபூஜை போட்டு, கட்டுமான
பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மருத்துவமனைக்கு தேவையான போர்வைகளை வழங்கினார். அதை டீன் தேவிமீனாள்
பெற்று கொண்டார். கலெக்டர் பிருந்தாதேவி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்
ராமச்சந்திரன், சித்த மருத்துவர் சத்யநாராயணன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.