/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
/
நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
ADDED : ஏப் 17, 2025 01:38 AM
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி, பாரப்பட்டியில், 'அட்மா' திட்டத்தில், ஒருங்கிணைந்த எண்ணெய் வித்து பயிர்களில், நிலக்கடலை சாகுபடியில் விதைப்பு முதல் அறுவடை வரையான தொழில்நுட்ப பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது.
வட்டார அட்மா குழு தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத், விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுாட்டங்களை மானியத்தில் பெற்று பயன்பெற அறிவுறுத்தினார்.
சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள், நிலக்கடலையில் நீர் நிர்வாகம், உர மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்தார். 'அட்மா' திட்ட தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா, உதவி மேலாளர் ரேணுகா ஆகியோர், நிலக்கடலையில் ஜிப்சம் இடும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இதில், 50 விவசாயிகள் பயனடைந்தனர்.