/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குரூப்-- - 4 தேர்வு 11,750 பேர் 'ஆப்சென்ட்'
/
குரூப்-- - 4 தேர்வு 11,750 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : ஜூலை 13, 2025 01:54 AM
சேலம், சேலம் மாவட்டத்தில், 14 வட்டத்துக்கு உட்பட்ட, 217 மையங்களில் அமைக்கப்பட்ட 287 தேர்வு அறைகளில், குரூப் - 4 தேர்வு நேற்று நடந்தது. தேர்வர்கள், காலை, 9:00 மணி வரை மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அதற்கு பின் வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வெழுத அனுமதிக்கப்பட்ட, 76,999 பேரில், 65,249 பேர் மட்டும் வருகை தந்தனர். இது, 84.74 சதவீதம். 11,750 பேர் வரவில்லை. இது, 15.25 சதவீதம்.சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தை, கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு செய்தார். அறை கண்காணிப்பாளர், 5,740 பேர், 287 முதன்மை கண்காணிப்பாளர், 71 நடமாடும் கண்காணிப்பு குழுக்கள், 25 பறக்கும் படையினர், தேர்வை கண்காணித்தனர். அனைத்து தேர்வு அறைகளும், வீடியோ பதிவு செய்யப்பட்டன.

