/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று 76,000 பேருக்கு குரூப் - 4 தேர்வு
/
இன்று 76,000 பேருக்கு குரூப் - 4 தேர்வு
ADDED : ஜூலை 12, 2025 12:50 AM
சேலம் :தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், இன்று நடக்கும் குரூப் - 4 தேர்வெழுத, சேலம் மாவட்டத்தில், 76,999 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு, 14 வட்டங்களில், 217 கூடங்களில், 287 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை, 9:30 முதல், மதியம், 12:30 மணி வரை தேர்வு நடக்கிறது.
தேர்வர்கள், 9:00 மணிக்குள், கூடத்துக்குள் வந்துவிட வேண்டும். தேர்வை கண்காணிக்க, 5,740 அறை கண்காணிப்பாளர், 287 முதன்மை கண்காணிப்பாளர், 71 நடமாடும் கண்காணிப்பு குழுக்கள், 25 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடப்பதை, வீடியோ பதிவு செய்யப்படும். தேர்வர்கள் வசதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்தார்.