/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொலை வழக்கில் சிக்கியவர் மீது 6ம் முறை 'குண்டாஸ்'
/
கொலை வழக்கில் சிக்கியவர் மீது 6ம் முறை 'குண்டாஸ்'
ADDED : டிச 11, 2024 07:17 AM
சேலம் : வாழப்பாடி அருகே காட்டூர் ஆனந்தனின் கொலைக்கு பழிக்குப்பழியாக, கடந்த நவ., 8ல், காரில் வந்த சரவணன் என்பவரை, அயோத்தியாபட்டணம் அருகே பனந்தோப்பு பகுதியில் வழிமறித்து, மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இதில், 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதில், 8 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த, சேலம், அழகாபுரம், திருப்பதி நகரை சேர்ந்த பூபாலன், 27, மீது நேற்று குண்டாஸ் பாய்ந்தது. இதற்கான உத்தரவை, கமிஷனர் பிரவீண்குமார் அபினபு பிறப்பித்துள்ளார். பூபாலன் ஏற்கனவே, 5 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்றும், தற்போது, 6ம் முறையாக குண்டாஸ் பாய்ந்துள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

