/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேருக்கு 'குண்டாஸ்'
/
வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேருக்கு 'குண்டாஸ்'
ADDED : நவ 29, 2025 01:04 AM
சேலம், அயோத்தியாப்பட்டணம் அருகே மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த சந்திரசேகரன் வீட்டில், கடந்த, 13ல் புகுந்த முகமூடி கும்பல், கத்தியை காட்டி மிரட்டி ஒரு பவுன் நகையை திருடி சென்றது. இதில் கோரிமேடு, ஜல்லிக்காட்டை சேர்ந்த தீனா, 25, சின்னதிருப்பதி அய்யனார், 20, ரகுவரன், 33, கோலாத்துக்கோம்பை புதுார் வசந்தகுமார், 35, ஆகியோரை கைது செய்தனர்.
அதேபோல் கடந்த, 8ல், மாமாங்கத்தில் தமிழ்செல்வன் என்பவரை கத்திமுனையில் மிரட்டி, அவரிடமிருந்து, 2,000 ரூபாயை பறித்துச்சென்ற, ஆட்டையாம்பட்டியை சேர்ந்த சத்தியராஜ், 31, என்பவரை, சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த, 5 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கமிஷனர் அனில்குமார் கிரி, நேற்று உத்தரவிட்டார்.

