/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.10 லட்சம் மோசடி வாலிபருக்கு 'குண்டாஸ்'
/
ரூ.10 லட்சம் மோசடி வாலிபருக்கு 'குண்டாஸ்'
ADDED : அக் 25, 2025 01:00 AM
சேலம், திருநெல்வேலி, பேட்டை, சேரன் மகாதேவி சாலையை சேர்ந்தவர் ஆஷிக் முகமது, 35. இவர், கம்போடியா சென்று திரும்பியவர்.
இவர், அங்குள்ள நண்பருடன் சேர்ந்து கொண்டு, 'ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்' என, அன்னதானப்பட்டியை சேர்ந்த கார்த்திகேயனிடம் தெரிவித்துள்ளார். அதை நம்பிய அவர், 10.15 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார்.ஆனால் லாபம் கிடைக்காததோடு, கொடுத்த பணத்தையும் தராமல் மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து, கார்த்திகேயன் புகார்படி, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து, கடந்த, 1ல், ஆஷிக் முகமதுவை கைது செய்தனர்.இந்நிலையில் வர்த்தகம் செய்பவர்களிடம் பீதியை ஏற்படுத்தி, பொது அமைதி பாதிக்கும்படி நடந்து கொண்டதால், ஆஷிக் முகமதுவை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, நேற்று உத்தரவிட்டார்.

