/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபட் மீது கார் மோதல் தாய் பலி; மகன் 'சீரியஸ்'
/
மொபட் மீது கார் மோதல் தாய் பலி; மகன் 'சீரியஸ்'
ADDED : அக் 25, 2025 01:00 AM
இடைப்பாடி, சங்ககிரி, தேவூர் அருகே காவேரிப்பட்டியை சேர்ந்த கொத்தனார் முருகேசன், 39. இவரது மனைவி வாசுகி, 30. குமாரபாளையத்தில் உள்ள கார்மென்ட்ஸில் தையல் தொழிலாளியாக பணிபுரிந்தார். இவர்களது மகன் கண்ணன், 15, தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார். டி.வி.எஸ்., மொபட்டில் வாசுகி, கண்ணன், பவானியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, நேற்று திரும்பி வீட்டுக்கு புறப்பட்டனர்.
ஹெல்மெட் அணியாமல் வாசுகி ஓட்டினார்.மதியம், 1:30 மணிக்கு, புள்ளாகவுண்டம்பட்டியில் வந்தபோது, எதிரே இடது பக்கமாக வந்த, 'ஸ்கோடா' கார், சாலையின் வலதுபக்கம் சென்ற மொபட் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் வாசுகி சம்பவ இடத்தில் பலியானார். கண்ணன் படுகாயம் அடைந்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய கார் டிரைவர் குறித்து, தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

