/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒடிசாவை சேர்ந்த 3 பேருக்கு குண்டாஸ்
/
ஒடிசாவை சேர்ந்த 3 பேருக்கு குண்டாஸ்
ADDED : ஆக 21, 2025 02:18 AM
வாழப்பாடி, வாழப்பாடி ரயில்வே கேட் பின்புறம், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தேஜாராஜா புட்டேல், 26, அவரது நண்பர் ஜூப்ராஜ் மெகர், 27, ஆகியோரை, கடந்த ஜூலை 19ல், வாழப்பாடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், 21 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் கஞ்சா வாங்கி, திருப்பூரில் விற்ற, அங்குள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரியும், ஒடிசாவை சேர்ந்த ராஜகுமார ராணா, 26, என்பவரையும் கைது செய்து, 1.250 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, 3 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் எஸ்.பி., கவுதம் கோயல் பரிந்துரைப்படி, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, அந்த, 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க நேற்று உத்தரவிட்டார்.