/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாராயம் விற்றவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
/
சாராயம் விற்றவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
ADDED : ஆக 25, 2025 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: கள்ளக்குறிச்சி மாவட் டம் வெள்ளி மலை, பட்டிவளவை சேர்ந்-தவர் செவத்தான், 49.
இவர் கடந்த ஜூலை, 22ல், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், கரியகோவில் பகுதியில், சாராயம் விற்ற நிலையில், ஆத்துார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சாராயம் விற்று வந்தவர் என்பதால், குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, எஸ்.பி., கவுதம்கோயல் பரிந்துரைத்தார். அதை ஏற்று, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, நேற்று செவத்தானை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி ஆத்துார் மது-விலக்கு போலீசார், செவத்தானை, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்