/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாராய வியாபாரி மீது பாய்ந்தது குண்டாஸ்
/
சாராய வியாபாரி மீது பாய்ந்தது குண்டாஸ்
ADDED : ஆக 26, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,கள்ளக்குறிச்சி மாவட்டம், பட்டிவளவு பகுதியை சேர்ந்த செவத்தான், 49, சாராய வியாபாரி. கடந்த, 22ல் கரியக்கோவில் பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தபோது, கரிய கோவில் போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் செவத்தான் மீது ஏற்கனவே, கருமந்துறை, கரியகோவில், கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன்களில், சாராய விற்பனை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்ததால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. கவுதம் கோயல், கலெக்டர் பிருந்தாதேவிக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து நேற்று, செவத்தானை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.