/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலி மது விற்றவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
/
போலி மது விற்றவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
ADDED : அக் 26, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், அமானி கொண்டலாம்பட்டி, கரட்டூரை சேர்ந்தவர் குமார், 44. இவர் கடந்த செப்., 23ல், கரட்டூர் பிள்ளையார் நகரில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்றதால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து, 9 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் அதிக லாபம் ஈட்டும் நோக்கில், மதுபானங்களில் ஊமத்தை இலைச்சாறு கலந்து விற்றது கண்டறியப்பட்டது. ஏற்கனவே சட்டவிரோதமாக மது விற்ற இரு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து, போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, நேற்று
உத்தரவிட்டார்.

