ADDED : நவ 27, 2024 06:44 AM
சேலம்: சேலம், மரவனேரி, வாத்தியார் தோட்டம், காந்தி நகரை சேர்ந்தவர் விக்னேஷ், 26. இவர் கடந்த அக்., 31ல், காந்திநகர் அருகே போதையில் தவறி விழுந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பெண்ணும், அவரது தம்பியும், விக்னேைஷ காப்பாற்றினர். ஆனால் அவர்களை தகாத வார்த்தையில் பேசியவர், நவ., 2 இரவு, அப்பெண்ணின் வீட்டுக்கு சென்று, கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார், விக்னேைஷ கைது செய்தனர்.
விசாரணையில் அவர் மீது, 2023ல் சின்ன திருப்பதியில் பட்டாசு வெடித்த தகராறில் கணேசனை தாக்கி கொல்ல முயன்றது; கடந்த மார்ச்சில் சேலம் நீதிமன்றம் அருகே ஜீவானந்தம் என்பவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிந்தது. இதனால் போலீஸ் கமிஷனர் உமா (பொ) உத்தரவுப்படி, நேற்று விக்னேஷ், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் ஓராண்டுக்கு அடைக்கப்பட்டார்.