/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'திருந்தாத' வாலிபர் மீது 3ம் முறை பாய்ந்தது குண்டாஸ்
/
'திருந்தாத' வாலிபர் மீது 3ம் முறை பாய்ந்தது குண்டாஸ்
'திருந்தாத' வாலிபர் மீது 3ம் முறை பாய்ந்தது குண்டாஸ்
'திருந்தாத' வாலிபர் மீது 3ம் முறை பாய்ந்தது குண்டாஸ்
ADDED : அக் 21, 2024 07:10 AM
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், புது சுண்ணாம்பு சூளை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கடந்த, 29ல் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்து சென்றபோது கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ஜான், 31, என்பவர், அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி, 5,000 ரூபாயை பறித்துக்கொண்டார். இதுகுறித்து ஆறுமுகம் புகார்படி கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்து, ஜானை கைது செய்தனர்.
இவர் ஏற்கனவே, 2016, 2021ம் ஆண்டுகளில் வழிப்பறி, கொலை வழக்கு குற்றத்தில் சிக்கி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். இதனால் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க, அவரை, 3ம் முறை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கமிஷனர் பிரவீன் குமார் அபினபு நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.