ADDED : டிச 15, 2024 01:03 AM
சேலம், டிச. 15-
தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம், உலக மண் தினம், தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம் ஆகியவற்றை முன்னிட்டு, விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் தொழில் முனைவோர், புதுமை கண்டுபிடிப்பு, சுற்றுச்சூழல், இளம் இந்தியர்கள் ஆகிய அமைப்புகள் மூலம், பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி, 'ஹாக்கத்தான் - 3.0' நிகழ்வு, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. துறை டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்றார்.
சேலம், ஈரோடு தமிழ்நாடு ஸ்டார்ட் அப் அமைப்பின் திட்ட தலைவர் குருசங்கர் செல்வம், சேலம் ஜெயராஜ் நுால்கள் தயாரிப்பு நிறுவன தலைவர் காசாய் இளங்குமரன், சேலம் ரோட்டரி அமைப்பின் சேவை இயக்குனர் மற்றும் சேலம் இயற்கை அமைப்பின் நிறுவனர் கோகுல் ஆகியோர், மாசு கட்டுப்பாடு, மண் வளத்தை பாதுகாத்தல், ஆற்றல் பாதுகாப்பு ஆகியவை சார்ந்த புதுமை கண்டுபிடிப்பு சார்ந்த நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து மாணவர்களுக்கு மேற்கூறியவைகள் சார்ந்த புதுமை படைப்புகளை முன்னிலைப்படுத்தும் போட்டி நடத்தப்பட்டது. முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாட்டை, துறையின் தொழில் முனைவோர் தலைவர் தமிழ் சுடர், உதவி பேராசிரியர் முத்தமிழ்செல்வன், புதுமை கண்டுபிடிப்பு தலைவர் சதீஷ்குமார், சுற்றுச்சூழல் அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீவித்யா, மோகன், இளம் இந்தியர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆண்டனி காட்சன் செய்திருந்தனர்.