ADDED : மே 17, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார் ஆத்துார், கொத்தாம்பாடி, ராமநாயக்கன்பாளையம், தாண்டவராயபுரம் உள்ளிட்ட பகுதி
களில் நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் ராமநாயக்கன்பாளையத்தில் ஆலங்கட்டி மழையாக பெய்தது. சாலை, தெருக்களில் மழை நீர் ஓடியதால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசியது.
அதேபோல் வாழப்பாடி, மேட்டுப்பட்டி, ஏத்தாப்பூர், கருமந்துறை, சிங்கிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் காற்றுடன் கூடிய லேசான மழை பெய்தது.