sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாலை பணி பாதியில் நிறுத்தம் 5 மாதங்களாக மக்கள் அவதி

/

சாலை பணி பாதியில் நிறுத்தம் 5 மாதங்களாக மக்கள் அவதி

சாலை பணி பாதியில் நிறுத்தம் 5 மாதங்களாக மக்கள் அவதி

சாலை பணி பாதியில் நிறுத்தம் 5 மாதங்களாக மக்கள் அவதி


ADDED : பிப் 16, 2025 02:49 AM

Google News

ADDED : பிப் 16, 2025 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: இடைப்பாடி ஒன்றியம் ஆவணிப்பேரூர் கீழ்முகம் ஊராட்சி வெள்ளாண்டிவலசு, காமராஜ் நகரில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்கள் பஸ் போக்குவரத்-துக்கும், நகரின் பிரதான சாலைக்கும் வர, தீயணைப்பு நிலையம் உள்ள சாலையை தான் பயன்படுத்துகின்றனர். 1 கி.மீ., உள்ள அச்சாலை குண்டும், குழியுமாக இருந்ததால், முதல்வர் கிராம சாலைகள் திட்டத்தில், 21.45 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்க, சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் கடந்த ஆண்டு

ஒப்பந்தம் விடப்பட்டது.

இதையடுத்து, 6 மாதங்களுக்கு முன் சாலையை உடைத்து பெரிய ஜல்லிக்கற்களால், ஒரு அடுக்கு சாலை போடப்பட்டது. அதன் மீது மற்றொரு அடுக்கு தார்ச்சாலை அமைக்கப்பட வேண்டும். ஆனால், ஜல்லி போட்டு, 5 மாதங்களுக்கு மேலாகியும் அச்சா-லையை சீரமைக்க நடவடிக்கை இல்லை. இதனால் குழந்தைகள், முதியோர் நடந்து செல்ல முடியாமல் சிரமத்துக்கு ஆளாகின்-றனர். இருசக்கர வாகன ஓட்டிகளும் தடுமாறியபடி சென்று வருகின்-றனர்.

இதுகுறித்து ஒன்றிய அலுவலர்களிடம் கேட்டபோது, 'இங்கு பணியாற்றிய ஒன்றிய உதவி பொறியாளர், கடந்த மாதம் பதவி உயர்வில் வேறு மாவட்டத்துக்கு சென்றார். அதேபோல் வட்டார உதவி செயற்பொறியாளர் பணியிடமும் காலியாக உள்ளது. இதனால் ஏற்கனவே போடப்பட்ட ஜல்லிக்கற்கள் குறித்து அள-வீடு செய்த பின்தான், அதன் மீது புதிதாக சாலை அமைக்க முடியும். அதிகாரிகள் இல்லாததால், அச்சாலையை மேற்-கொண்டு போட இயலாமல் உள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us