/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
6 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
/
6 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
6 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
6 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
ADDED : நவ 22, 2025 12:13 AM
சேலம்: தமிழகத்தில், 6 முதல், பிளஸ் 2 வரை, அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. டிச., 10 முதல், 23 வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தனியார் பள்ளிகள் இயக்குநர் குப்புசாமி ஆகியோர், கூட்டாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 6 முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கான, அரையாண்டு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 6 முதல், 9ம் வகுப்பு வரை, டிச., 15ல் தமிழ்; 16ல் ஆங்கிலம்; 18ல் கணிதம்; 19ல் உடற்கல்வி; 22ல் அறிவியல்; 23ல் சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும்.
ஆறு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு காலை, 10:00 முதல் 12:30 மணி வரையும், ஏழு, ஒன்பதாம் வகுப்புகளுக்கு மதியம், 2:00 முதல் 4:30 மணி வரையும் தேர்வு நடக்கும்.
பத்தாம் வகுப்புக்கு, டிச., 10ல் தமிழ்; 12ல் ஆங்கிலம்; 15ல் கணிதம்; 18ல் அறிவியல்; 22ல் சமூக அறிவியல் தேர்வுகள் காலை, 9:45 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும்.
பிளஸ் 2 வகுப்புகளுக்கு டிச., 10ல் தமிழ்; 12ல் ஆங்கிலம்; 15ல் கணிதம்; 17ல் வேதியியல்; 19ல் இயற்பியல்; 22ல் உயிரியல்; 23ல் கணினி அறிவியல் தேர்வுகள், காலை, 9:45 முதல், 1:00 மணி வரை நடக்கும். மதியம் பிளஸ் 1 தேர்வு நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

