/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருடுபோன மொபைல் உரியவரிடம் ஒப்படைப்பு
/
திருடுபோன மொபைல் உரியவரிடம் ஒப்படைப்பு
ADDED : ஜூன் 20, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாநகர போலீஸ் சார்பில் புதன்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
சேலம் போலீஸ் சமுதாய கூடத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், கமிஷனர் விஜயகுமாரி, பலரிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் காடையாம்பட்டியை சேர்ந்த அர்ஜூனன் 54, கடந்த மாதம் பஸ்சில் வந்தபோது, அவரது மொபைல் போன் திருடுபோனது. சேலம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து மொபைல் போனை மீட்டனர். அந்த போன், கூட்டத்தில் அர்ஜூனனிடம், கமிஷனர் விஜயகுமாரி ஒப்படைத்தார். துணை கமிஷனர் மதிவாணன் உள்பட பலர் பங்கேற்றனர்.