/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று அனுமன் ஜெயந்தி விழா: 10,008 வடைமாலை சாற்ற ஏற்பாடு
/
இன்று அனுமன் ஜெயந்தி விழா: 10,008 வடைமாலை சாற்ற ஏற்பாடு
இன்று அனுமன் ஜெயந்தி விழா: 10,008 வடைமாலை சாற்ற ஏற்பாடு
இன்று அனுமன் ஜெயந்தி விழா: 10,008 வடைமாலை சாற்ற ஏற்பாடு
ADDED : டிச 30, 2024 02:39 AM
மேட்டூர்: அமாவாசை திதி, மூல நட்சத்திரம் இணையும் நாளில் பிறந்த அனுமனுக்கு, ஆண்டுதோறும் அதே அமாவாசை நாளில் சிறப்பு அலங்காரம் செய்து, ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
அதன்படி மேச்சேரி, கைகாட்டி வெள்ளாறு வசந்தம் நகர் ராமபக்த ஆஞ்ச-நேயருக்கு, இன்று காலை, 6:00 மணிக்கு, 10,008 வடைமாலை சாற்றி அலங்காரம், மதியம், 12:00 மணிக்கு தங்க கவசம் சாற்றி லட்சார்ச்சனை நடக்கிறது.அதேபோல் தெத்திகிரிப்பட்டி, அகத்தியர் நகர் அபய ஆஞ்சநேய-ருக்கு சிறப்பு அலங்காரம், சேலம் கேம்ப், 8 அடி உயர ஜீவ ஆஞ்-சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. சின்னபார்க் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள கணேச ஆஞ்-சநேயருக்கு, காலை, வெண்ணெய் காப்பு, இரவு, 1,008 வடை மாலை அலங்காரம் செய்யப்படுகிறது. மூலக்காடு, அச்சங்காடு வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.