sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'அண்டை வீட்டாரிடம் அன்பை பகிர்வதில் தான் மகிழ்ச்சி'

/

'அண்டை வீட்டாரிடம் அன்பை பகிர்வதில் தான் மகிழ்ச்சி'

'அண்டை வீட்டாரிடம் அன்பை பகிர்வதில் தான் மகிழ்ச்சி'

'அண்டை வீட்டாரிடம் அன்பை பகிர்வதில் தான் மகிழ்ச்சி'


ADDED : டிச 25, 2025 05:02 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் மறை மாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் அறிக்கை:

அன்பு, அமைதி மலரட்டும். குளிர்ச்சியான பனிக்காற்றும், விண்மீன் ஒளியும் சூழ்ந்த இந்த வேளையில், ஜாதி, மதம் கடந்து, மனித நேயத்தை பறைசாற்றும் உன்னத திருவிழாவாக கிறிஸ்துமஸ் மலர்ந்துள்ளது. ஈராயிரம் ஆண்டுக்கு முன், ஏழ்மை-யான மாட்டு தொழுவத்தில், இயேசு பாலகன் அவதரித்தது, இறைவன் எப்போதும் எளியோருடனும் ஒடுக்கப்பட்டோரு-டனும் இருக்கிறார் என்பதையே, நமக்கு உணர்த்துகிறது.

'

விடுதியில் இடமில்லாததால் தீவன தொட்டியில் அவர் கிடத்-தப்பட்டார்' என்ற விவிலிய வரிகள், ஆடம்பரத்தை விடுத்து எளி-மையை தழுவ நம்மை அழைக்கின்றன. இயேசு பிறந்த இரவில், வானதுாதர்கள் பாடிய, 'உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக' என்ற பாடல், இன்றும் அமைதியின் தாரக மந்திரமாய் ஒலிக்கிறது.வானில் தோன்றிய விண்மீன், எவ்வாறு ஞானிகளை வழிநடத்-தியதோ, அவ்வாறே இயேசுவின் போதனைகள், இருளில் வாழும் மக்களுக்கு ஒளியாகவும், வழி தவறியவர்களுக்கு நல்வழிகாட்டி-யாகவும் அமைகின்றன.

'இம்மானுவேல்', அதாவது, 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்ற வாக்குறுதி நம் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் அளிக்கிறது. 'ஒருவருக்கொருவர் அன்பு செலுத்-துங்கள்' என்ற உயரிய தத்துவத்தை வாழ்ந்து காட்டவே ஆண்-டவர் இயேசு, இந்த மண்ணுக்கு வந்தார். ஜொலிக்கும் விளக்கு-களும், இனிப்புகளும் ஒருபுறம் இருந்தாலும், அண்டை வீட்டா-ரிடம் அன்பை பகிர்ந்து கொள்வதிலும், தேவையுள்ள ஏழை எளி-யவர்களுக்கு கரம் கொடுப்பதிலும் தான் உண்மையான மகிழ்ச்சி அடங்கியுள்ளது.

இந்த நன்னாளில் விளிம்பு நிலை மக்களுக்காக, நம் இதயங்-களை திறப்போம். ஆண்டவர் இயேசுவின் பிறப்பு நம் இல்லங்-களில் மகிழ்ச்சியையும், உள்ளங்களில் அமைதியையும் கொண்டு வர வாழ்த்துகிறேன். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ், புத்-தாண்டு நல்வாழ்த்து.






      Dinamalar
      Follow us