/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை உபரிநீர் திட்டம் 36 ஏரிகள் நிரம்பியதால் மகிழ்ச்சி
/
மேட்டூர் அணை உபரிநீர் திட்டம் 36 ஏரிகள் நிரம்பியதால் மகிழ்ச்சி
மேட்டூர் அணை உபரிநீர் திட்டம் 36 ஏரிகள் நிரம்பியதால் மகிழ்ச்சி
மேட்டூர் அணை உபரிநீர் திட்டம் 36 ஏரிகள் நிரம்பியதால் மகிழ்ச்சி
ADDED : ஆக 07, 2025 03:02 AM
மேட்டூர்:மேட்டூர் அணை உபரிநீர் திட்டம் வாயிலாக 36 ஏரிகள் நிரம்பியதால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் அணை உபரிநீரை, சேலம் மாவட்டத்தில் உள்ள, 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தில் முதல் கட்டமாக, 79 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், 57 ஏரிகளில் உபரிநீரை நிரப்பலாம்.
இதர ஏரிகளை நிரப்ப, அதற்கு செல்லும் கால்வாய்களை துார்வார வேண்டும் அல்லது குழாய் பதித்து தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது.
நடப்பாண்டில் கடந்த ஜூன், 29ல் முதல்முறை, ஜூலை 25ல், 4ம் முறை மேட்டூர் அணை நிரம்பியது. இதனால் அணை கரையோரம் திப்பம்பட்டி நீரேற்று நிலையம் வழியே, 100 ஏரிகளை நிரப்பும் உபரிநீர் திட்டத்தில் ஏரிகளை நிரப்ப தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.
இதனால் மேட்டூர், ஓமலுார், இடைப்பாடி, சங்ககிரி, காடையாம்பட்டி வட்டங்களில், வெள்ளாளபுரம், வேம்பனேரி, மானத்தாள், தாரமங்கலம் உள்ளிட்ட பெரிய ஏரிகள் உட்பட, 36 ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீதி, 21 ஏரிகளில், 5 ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது.
அதேநேரம் தண்ணீர் கொண்டு செல்ல முடியாத, 22 ஏரிகளில் கால்வாய் துார்வாரவும், குழாய் பதிக்கவும் நிதி ஒதுக்க வேண்டும் என, மேட்டூர் அணை உபரி நீர் திட்ட பாசன திட்ட அதிகாரிகள், அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பியுள்ளனர்.