/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இன்று ஹயக்ரீவ வித்யா யாகம்
/
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இன்று ஹயக்ரீவ வித்யா யாகம்
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இன்று ஹயக்ரீவ வித்யா யாகம்
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இன்று ஹயக்ரீவ வித்யா யாகம்
ADDED : பிப் 18, 2024 10:05 AM
சேலம்: சேலம் மாவட்ட சவுராஷ்டிரா சமூக முன்னேற்ற அறக்கட்டளை மகளிர் குழு சார்பில், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவில் எதிரே, பரமக்குடி நன்னுசாமி தெருவில் உள்ள கூடத்தில், ஹயக்ரீவ வித்யா யாகம், 12ம் ஆண்டாக இன்று நடக்கிறது.
காலை, 10:00 முதல், 12:30 மணி வரை நடக்க உள்ள சிறப்பு யாகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம்.
அதில் திருவாரூர் மாவட்ட வேளாண் அலுவலர் பாஸ்கர், ஓய்வு பெற்ற மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன், ஹோமியோபதி ஆலோசகர் இலக்கியா ஆகியோர், மாணவர்கள் அச்சமின்றி தேர்வை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை வழங்குகின்றனர்.
மேலும் யாகத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, அதில் வைத்து பூஜை செய்த பேனா, பென்சில், ரப்பர் போன்ற எழுது பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இதற்கான ஏற்பாடுகளை சவுராஷ்டிரா சமூக அறக்கட்டளை, எஸ்.எம்.எஸ்., மகளிர் குழுவினர் மேற்கொண்டனர்.