ADDED : ஏப் 28, 2025 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக கோடை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. நரசிங்கபுரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் இரவு, 7:00 மணிக்கு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. நரசிங்கபுரம், செல்லியம்பாளையம், கல்பகனுார், கொத்தம்பாடி, ராமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஒரு மணி நேரத்துக்கு மேல் கொட்டி தீர்த்தது. வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேபோல் தாரமங்கலத்தில் நேற்று மாலை, 6:30 முதல், இரவு, 7:15 மணி வரை மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியதால், வெயிலில் இரவில் துாக்கமின்றி தவித்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

