ADDED : மே 09, 2024 06:47 AM
சேலம் : சேலம் அரசு மருத்துமனையில் தீயணைப்பு துறை சார்பில், தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
அதில் தீ விபத்து ஏற்படும் பேரிடர் காலங்களில் தற்காத்துக்கொள்ளும் நடைமுறை, தீயணைப்பு சாதனங்கள் பயன்படுத்தும் முறை குறித்தும், தீ விபத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறை குறித்தும், தீயணைப்பு வீரர்கள், செயல் விளக்கம் அளித்தனர். மருத்துவமனை டீன் மணி, கண்காணிப்பாளர் தனபால், ஆர்.எம்.ஓ., லதா, மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.
அதேபோல் காடையாம்பட்டி தீயணைப்புதுறை நிலைய அலுவலர் ராஜசேகரன் தலைமையில் வீரர்கள், பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள வெப்ப அலை பாதுகாப்பு குறித்து சரக்கப்பிள்ளையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவனையில் செயல் விளக்கம் அளித்தனர். மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், மக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அவரசகால தீத்தடுப்பு செயல் முறைகளை நிகழ்த்தி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.கொத்தாம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், வெப்ப அலைகள், தீ தடுப்பு குறித்து செயல்விளக்கம் அளித்தனர். தெடாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், செயல்விளக்கம் அளித்தனர்.