ADDED : ஆக 12, 2024 06:31 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவில் கன மழை பெய்கிறது. நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் மாலையில் சாரல் மழை பெய்தது. இரவு, 8:00 மணிக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகள், வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.
வீட்டின் சுவர் இடிந்ததுசீலநாயக்கன்பட்டி சக்தி நகரை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுப்ரமணி. இவரது ஓட்டு வீட்டில், 8 பேர் வசிக்கின்றனர். நேற்று இரவு பெய்த கனமழையால், அவரது வீட்டின் ஒரு புற சுவர் இடிந்து வெளிப்புறமாக சரிந்து விழுந்தது. இதனால் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.அதேபோல் அயோத்தியாப்பட்டணம் அடுத்த பள்ளிப்பட்டியில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள அம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகினர்.

