/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சங்ககிரியில் 3 மாதத்துக்கு பின் பலத்த காற்றுடன் கனமழை
/
சங்ககிரியில் 3 மாதத்துக்கு பின் பலத்த காற்றுடன் கனமழை
சங்ககிரியில் 3 மாதத்துக்கு பின் பலத்த காற்றுடன் கனமழை
சங்ககிரியில் 3 மாதத்துக்கு பின் பலத்த காற்றுடன் கனமழை
ADDED : மே 15, 2024 07:48 AM
சங்ககிரி : சங்ககிரி நகர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மாதத்துக்கு மேலாக வெயில் சுட்டெரித்தது. நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேல் மின்தடை ஏற்பட்டது. கடந்த ஜனவரியில், 8.2 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. ௩ மாதங்களுக்கு பின் பெய்த மழையால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேபோல் வாழப்பாடி, ஏத்தாப்பூர், காரிப்பட்டி, மேட்டுப்பட்டி, சிங்கிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. மதியம், 2:30 மணிக்கு மழை பெய்ய தொடங்கி, ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.