ADDED : ஆக 31, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்காடு: ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதி
களில் சில நாட்களாக பகலில் கடும் வெப்பம், இரவில் கடுங்-குளிர் நிலவிய நிலையில், இரு நாட்களுக்கு முன் மழை பெய்து வெப்பம் தணிந்தது. தொடர்ந்து நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.
இரவு, 7:05 மணிக்கு இடி, மின்-னலுடன் கனமழை பெய்ய தொடங்கி, 8:55 மணி வரை கொட்டி தீர்த்தது. பின் சாரல் மழையாக மாறியது. கனமழையின்போது மட்டும் ஏற்காடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை ஏற்-பட்டதால் மக்கள் அவதிக்கு ஆளாகினர்.

