ADDED : மே 18, 2026 02:00 AM

அ நிறம் | அளவு
வாழப்பாடி: வாழப்பாடி, காட்டுவேப்பிலைப்பட்டி, கிழக்குக்காடு முருகன் கோவில் அருகே நடராஜன் மனைவி நந்தினி, 40, என்பவ-ருக்கு சொந்தமான கோழி பண்ணை உள்ளது.
அங்கு நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு தீப்பற்றி எரிந்தது.
மக்கள் தகவல்படி, வாழப்பாடி தீயணைப்பு துறையினர், 10 நிமி-டத்தில் அங்கு சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அரை மணி நேரத்தில் தீயை கட்டுப்படுத்தினர். அங்கு தற்காலிகமாக கோழிகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, வாழப்பாடி போலீசார் தெரிவித்தனர்.
